வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: ‘ஆறுகளில் நீர்மட்டம் குறைந்தாலும், அபாய நிலை நீடிக்கிறது’

Date:

நாட்டை நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் 13 கடற்படையினர் நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

அதன்படி களுத்துறை மாவட்டத்தில் பரகொட, பதுரலிய, புலத்சிங்கள, பெலவத்த, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி டவுன், தெல்கொட, அயகம மற்றும் மூவகம பகுதிகள் மற்றும் காலி மாவட்டத்தில் தவலம, ஹினிதும, நாகொட, மாபலகம ஆகிய பகுதிகளை மேற்கு கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை, பரகொட மற்றும் கூடலிகம மற்றும் காலி மற்றும் ஹினிதும பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான நிவாரணப் பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு கடற்படை கட்டளையின் 25 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையின் 05 நிவாரண குழுக்களும் மற்றும் வடமேல் கடற்படை கட்டளையின் 10 நிவாரண குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு கணிசமான மழை பெய்யாததால் அனைத்து ஆறுகளின் நீர்மட்டமும் இன்று பாரியளவில் உயரும் என எதிர்பார்க்கப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து ஆறுகளிலும் மழை பெய்து வருவதால், எதிர்காலத்தில் ஆறுகளில் அபாயகரமான நிலையை அடையலாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...