குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று!

Date:

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று  நடைபெறவுள்ளது.

695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் தலைமையில் இந்த நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது.

துணை மதிப்பீட்டில் உள்ள 695 பில்லியன் ரூபாயில் 395 பில்லியன் மீள் செலவினமாகவும் 300 பில்லியன் மூலதனச் செலவினமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை மேற்கொண்டு வழங்குவதற்காக 87,000 மில்லியன் ரூபாயும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும். 5,000 ரூபாய் கொடுப்பனவுக்காக 40,000 மில்லியன் ரூபாயும் மேலதிக கொடுப்பனவுக்காக 15,000 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

695 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய செலவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து செலவுகளையும் குறைப்பதன் மூலம் 300 பில்லியனுக்கும் அதிகமான தொகையை இது சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...