டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளையின் துணை நிறுவனமான அனர்த்த சுகாதாரம் மற்றும் சூழல் முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு கலாசாரத்துக்கும் அபிவிருத்திக்குமான (MFCD) அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தது.
கொலொன்னாவ மேலதிக பிரதேச செயலாளர் பனராமன அவர்களால் இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.