ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் கண்டியில்..!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (18) கண்டி – கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை தெரிவு நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்குசுமார் 8,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கிளைகளின் பிரதிநிதிகள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியில் மாற்றமொன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...