அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக் கூட்டம் இன்று (18) சனிக்கிழமை கண்டி, கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இதன்போதே, அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

இந்த பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை பதவியில் மாற்றமொன்று நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாராக கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸ்ஹரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...