பாராளுமன்ற அமர்வு இன்று!

Date:

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை குற்றவியல் நடைமுறைச் திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் ஆகியவை விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

அதன்பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தொழில் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு நேரத்தின் பிரேரணை இன்று மாலை 4.50 முதல் 5.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் மீதான விவாதம் நாளை முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

மார்ச் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முதலாவது அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மைய மோதல்களின்போது படுகொலை செய்யப்பட்ட மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் இரண்டாவது நாள் அனுதாப விவாதத்திற்கு எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரத்தை ஒதுக்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...