எரிபொருள் பிரச்சினை காரணமாக இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பாராளுமன்றத்தை மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்றும் (21) நாளையும் (22) மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (21) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தில் வாகனங்கள் செல்வதற்கு கடும் தடை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.