இலங்கை ஏற்கனவே இந்திய கடன் வரி மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துள்ள நிலையில், இலங்கைக்கான எதிர்கால உதவிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஜூன் 23 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்போது, ‘அவர்கள் ஏற்கனவே நிறைய செய்திருப்பதால், அவர்களுக்கென்று வரம்புகள் இருப்பதால், இந்தியாவிடம் கூடுதல் உதவியை நாங்கள் கோர முடியாது.
அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நம்பியிருப்பதுதான் இப்போது முன்னோக்கி செல்லும் ஒரே வழி,’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.