தொழில்நுட்ப அமைச்சு என்ற என புதிய அமைச்சொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இரண்டு அமைச்சுக்களும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இரண்டு அமைச்சுக்களும் பிரிக்கப்பட்டன.
இதன்படி நேற்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில்நுட்ப அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப அமைச்சு தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ளது.
இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் உட்பட பல நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.