அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை வர்த்தமானி அறிவித்து ஐந்து வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் அதனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.
இதேவேளை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என தான் நம்புவதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.