நாட்டுக்கு பணத்தை கொண்டு வரும் திட்டம் எதுவும் பிரதமரிடம் இல்லை: உடனடியாக பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக்க பெரேரா

Date:

மக்கள் போராட்டத்திற்கு தாம் ஆதரவளிப்பதாகவும், எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்கும் திட்டம் எதுவும் நிதி அமைச்சரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலர் நெருக்கடியுடன் தொடர்புடையது எனவும் நிதியமைச்சர் நண்பர்களிடம் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றும், டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன் பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் தம்மிக்க சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனால் நிதியமைச்சர் உடனடியாகக் கோரிக்கை விடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்றார்.

நிதியமைச்சரின் ஆலோசகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று ...

அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள்...

துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப்...