இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார்!

Date:

இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டோக்கியோ தயாராக உள்ளது.

எனினும் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அத்துடன் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் பட்சத்தில் சீனாவுடனான அத்தகைய சந்திப்பிற்கு ஜப்பான் தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...