அடுத்த வேளை உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்: யுனிசெப்!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரேயா அட்ஜெய், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலை தொடருமானால் குழந்தைகள் விடயத்தில் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் பாடசாலைகள் உரிய முறையில் இயங்காதமை காரணமாக நெருக்கடிக்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்ட மதிய உணவை கூட இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் உள்ள குழந்தைகள் அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...