ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு பிணை!

Date:

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பதினொரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட உயர் குற்றச்சாட்டுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கடந்த 9ஆம் திகதி (09) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பிரதிவாதிகளையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்களது வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தும் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...