ரணிலின் பொருளாதாரக் கொள்கை ‘காகத்தின் கூட்டில் உள்ள குஞ்சு போன்றது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நேற்று மாத்திரமல்ல ஒவ்வொரு நாளும் இவ்வாறான கொள்கைகளை முன்வைக்கிறார்.
தனியார் துறைக்கு முன்னுரிமை அளித்து, உலகத்துடன் ஒன்றிணைந்து, போட்டித்திறன் பற்றி தனக்கு கூறப்பட்டதாகவும், ஆனால் ராஜபக்ஷவாத பொருளாதாரம் அன்றிலிருந்து அந்த விஷயங்களைச் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா கூறினார்.
சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட முயற்சித்த போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இம்முறையும் அந்தத் திசையை மாற்ற பெரமுன குழு அனுமதிக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், குயிலுக்கு கூடு கட்டத்தெரியாது இதனால் அது காக்கையின் கூட்டில் முட்டையிடும். முதலில் குயில் குஞ்சும் காக்கை குஞ்சு போன்றே இருக்கும்.
குஞ்சுகள் பெரிதாகும் போது குயில் குஞ்சுகளை அடையாளம் கண்டு காகம் அவற்றை விரட்டிவிடும்.
அதேபோலத்தான் ரணிலின் பொருளாதாரக் கொள்கையும் இப்படி காக்கை கூட்டில் வளரும் குஞ்சைபோன்று தெரிகின்றது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.