மறைந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் 5 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (31) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 08 , எல்விட்டிகல மாவத்தையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொள்வார்.
கௌரவ விருந்தினராக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் கலந்துகொள்வதோடு, சிறப்பு பேச்சாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.