பேராதனைப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் பணி அனுபவத்தை வழங்குவதற்கும், பகுதி நேர வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுமார் 300 மாணவர்கள் பகுதிநேர வேலைகளைப் பெறுவார்கள். 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், பகுதி நேர வேலை தேவைப்படும் முதலாம் ஆண்டு மாணவர்களும் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
பேராசிரியர் லமவன்சவின் கருத்துப்படி, பகுதி நேர வேலைகளில் மாணவர்கள் மாதத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இலங்கையின் பொது பல்கலைக்கழக அமைப்பில் முதன்முறையாக இத்தகைய பகுதி நேர வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.