சீனாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்!

Date:

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

குறித்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

அப்போது அவருக்கு உடலில் தோல் அரிப்பு போன்ற பாதிப்பு உண்டானது. பின் அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

சோங்கிங் நகருக்கு வந்தவுடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதால் வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குரங்கு அம்மை சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த குரங்கு அம்மை நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும், உலக சுகாதார அவசரநிலையாகவும் கருத்திற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...