பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினூடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு வளவாளராக விசேட சட்ட வைத்திய நிபுணர் கே.பி.எஸ் பண்டார கலந்துகொள்வதோடு தமிழ் மொழியினூடாக சிரேஷ்ட மருத்துவ தாதி எஸ்.குமுதினி, விளக்கமளிப்பார்.
இதேவேளை நிகழ்வில் தலைமை உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் முஜிப் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.