2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு- செலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பின்னர், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று வரைவு சட்டமூலத்தின் முதல் வாசிப்பை திட்டமிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஆகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டிற்கான மொத்த தொடர் செலவீனம் ரூ. 4,634 பில்லியன் மொத்த மூலதனச் செலவு ரூ. 3,245 பில்லியன்.