முட்டை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் சில நாட்களில் அனைத்து ஹோட்டல்களும் இடிந்து விழும் நிலை ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை தட்டுப்பாடு காரணமாக கொத்து, முட்டை ரொட்டி போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சம்பத் தெரிவித்தார்.
சில பகுதிகளில் மீன் சாப்பாடு பார்சல் விலையை விட முட்டை சாப்பாட்டின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.