போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடாத்திவந்த ஒருவர் கைது!

Date:

நாடளாவிய  ரீதியில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை நடாத்தி மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பலருடன் இணைந்து போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் வலையமைப்பை நடத்தி வருவதாகவும், இவர்கள் அனைவருக்கும் எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்ய கண்டி நீதிமன்றத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் சந்தேகநபர் டிக்மன் வீதியில் மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...