‘டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது’

Date:

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், அதன்படி டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

இருப்பினும், மற்ற எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைப்பது போதாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்   தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் புதிய விலை 4,610 ரூபாய். அத்துடன், 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...