வெள்ளி விழா கண்ட புத்தளம் ஸாஹிரா மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின், வேண்டுகோள்!

Date:

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அவர்களை பராமரிக்கும் திட்டங்களும் முயற்சிகளும் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நிறைவேற்றப்படுகின்றன.

வலது குறைந்தவர்களை பராமரிப்பதும் பாதுகாப்பதும் சமூகக் கடமை மட்டுமன்றி மனிதாபிமான பொறுப்பும் ஆகும்.

அந்தவகையில் கடந்த 25 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பிரிவை பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு அதன் வெள்ளிவிழாவை  புத்தளம் ஸாகிரா ஆரம்ப பாடசாலை மிகச்சிறப்பாக கொண்டாடியது.

இதன் பணிகளை மேலும் முன்னேற்றும் நோக்கில் 2023 ஆம் ஆண்டுக்கான ஒரு கலண்டரை அச்சிட்டு நிதிசேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இது தொடர்பாக புத்தளம் கவிஞர் மரிக்கார் அவர்கள் எழுதியுள்ள ஒரு ஆக்கத்தை வாசகர்களுடன்  பகிர்ந்து கொள்கின்றோம்..

அனுதாபம் வேண்டாம்..! ஆதரவு தாருங்கள்..!!
Not Sympathy…! But Support…!!
—————

பார்வையிழந்தோர்… கேள்வியிழந்தோர்….
பிறக்கும் போதே அறிவு ஆற்றல் குறைபாடுகளோடு பூமியை சந்தித்தோர்…
அவர்கள் புத்தளத்திலும் இருக்கிறார்கள்…

அந்த உயிருள்ள பூக்களை அரவணைத்து… அன்புசெலுத்தி… கல்வியூட்டி கட்டியெழுப்பும் மகத்தான ஒரு பொறுப்பை,
புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலை, விஷேட கல்விக்கான பகுதி – Special Education Unit சுமந்து நிற்கிறது…!

###

கடந்த 25 வருடக் கால்நடையில்…
அதனது சாதனையின் அடையாளமாய் இன்று சுயமரியாதையுடன், சுயதொழிலுடன், சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும்…
விஷேட ஆற்றலுடைய மனிதர்களாய் பல மாணவர்களை மாற்றியமைத்திருக்கிறது…

குறைபாடுள்ள குழந்தையின் எதிர்காலம் குறித்து நெஞ்சில் நெருப்பைச்சுமந்திருந்த பல பெற்றோர்களின் கையில்…
அவர்களது பிள்ளைகளை ஆளுமைகளுடன் பரிசளித்திருக்கிறது…. அல்ஹம்துலில்லாஹ்…!

###

அல்லாஹ்வின் அருள்…
ஆசிரியர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பு…
பெற்றோரின் மகத்தான ஒத்துழைப்புடன், தற்போது 35 மாணவர்களுடன் இயங்கிவரும் இப்பகுதி,
இன்று அதனது சேவை மற்றும் கட்டட விரிவாக்கத்துடன் கூடிய அடுத்தகட்ட நகர்வில் பெரும் பொருளாதார சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது…!

அந்த சுமைகளை சற்று தளர்த்தும் வகையில்…

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 7 ஆம் திகதி புதன்கிழமை (07-12-2022),
குறித்த நிதிக்காக ஒரு calendar மற்றும் sticker விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…!

###

புத்தளம் நகரத்தில்… குறிப்பாக பஸார் பகுதியில்…
உங்களை நோக்கி வரவிருக்கும் உறவுகளை உதவிகளால் பலப்படுத்துமாறும்…

குறைந்த பட்சம் 500 ரூபா பெறுமதியான ஒரு calander, 50 ரூபா பெறுமதியான சில sticker களை பெற்றேனும்…
உங்கள் ஆதரவை பதிவுசெய்யுமாறும்… அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்…!

இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து…
விஷேட தேவையுடைய அந்த மாணவச்செல்வங்களின் முகத்தில் ஒரு புன்னகைக்கு பங்களிக்குமாறு…
பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அனுதாபம் வேண்டாம்..! ஆதரவு தாருங்கள்..!!
இலவசமாக வேண்டாம்… இதனைப் பெற்றுக்கொள்ளுங்கள்…!!

P/Zahira Primary – Special Education Unit சார்பாக,
புத்தளம் மரிக்கார்.
Zahira Primary School Puttalam

Popular

More like this
Related

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

Aplikacja Kasyno Na Prawdziwe Pieniądze, Aplikacje Hazardowe 2025

10 Najlepszych Gier Paypal, Które Szybko Wypłacają Prawdziwe PieniądzeContentTop-10...

Best Online Casinos Australia 2025 Trusted & Safe Au Sites

Unveiling Secrets Regarding Thriving In Online Casino Online!"ContentSuper Slots...