இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமைய சர்வதேச கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்த சந்தர்ப்பம், ரஷ்யா, இலங்கை மற்றும் மொறிசியஸ் நாடுகளுக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருக்கும் நாடுகளுக்கு இந்த முறைமையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளது.
சூடான், லக்சம்பர்க், கியூபா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விவாதங்களை ஆரம்பித்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த நான்கு நாடுகளுக்கும் இந்திய மத்திய வங்கியின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.