வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 125 பேர் உயிரிழப்பு!

Date:

வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிதேடியலைந்தவர்களில் இதுவரை 125 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்தவர்களில் இதுவரை 125 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை  முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களது போராட்டம்  இன்றுடன் 2128 நாட்களை எட்டியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...