தினேஷ் ஷாஃப்டரின் இறுதி சடங்குகள் இன்று!

Date:

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிச் சடங்குகள் இன்று (டிச. 18) நடைபெற உள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவரான தினேஷ் கடந்த 15 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தற்போது அவர் பொரளை பொது மயானத்திற்கு வந்த வழியிலேயே குற்றப் புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீதிகளின் சிசிடிவி காட்சிகளை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல பகுதிகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸும் அந்த நபர்களில் ஒருவர்.

பொரளை பொது மயானத்தில் கைகால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் காரில் சென்ற அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...