குப்பையில் கிடந்த உணவை நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் கூறிய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

Date:

மாத்தறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பிள்ளைகள் மதிய உணவை முடித்துவிட்டு மேசையில் சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கைகளை  நாக்கினால் சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் கூறியதாக கூறப்படும் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த சம்பவத்தை பாடசாலையின் ஊழியர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் தற்காலிகமாக மாத்தறை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...

விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...