13 வது திருத்தம் முஸ்லிம் சமூக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எச்சரிக்கிறார் சுற்றாடல் அமைச்சர்!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா, 2023ல் நடைபெறவுள்ள நிலையில்,தாஸிம் மௌலவி, கலீல் மௌலவி உள்ளிட்டோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டைச் நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க அமைப்பான ஜம்இய்யதுல் உலமா எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அரசியல் ரீதியான தனது தீர்மானங்கள், முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய பிரதிபலிப்புக்கள் குறித்தும் அமைச்சர் எடுத்து விளக்கினார்.

13 வது திருத்தம் முஸ்லிம் சமூக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்களை எச்சரித்த அவர், இவ்விடயத்தில் முஸ்லிம் எம்.பிக்களை ஒரேநிலைப்பாட்டுக்கு கொண்டு வருவதன் அவசியமும் ஜம்இய்யதுல் உலமா முக்கியஸ்தர்களுக்கு விளக்கப்பட்டது.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தையும், ஜனாஸா எரிப்பையும் முடிச்சுப்போட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரித்த அமைச்சர், ஒட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்வதற்காக தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் அரச உயர்மட்டங்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்தும் விபரித்தார்.

எதிர்க்கட்சி மனோநிலையில் எந்த நேரமும் செயற்படுவதால், ஏற்படவுள்ள ஆபத்துக்கள் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்தும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அரசியல் சாராத அமைப்புக்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...