ஓமான், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த “சேஃப் ஹவுஸ்” இல்லத்தில் தங்கியிருந்த 07 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் (Safe House ) தங்க வைக்கப்பட்டிருந்த 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது 04 பேரின் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அவர்கள் கடைசி நேரத்தில் விமானத்தில் அனுமதிக்கபடவில்லை.