விஜய்க்கு மகளாகும் இலங்கை பிக்பொஸ் பிரபலம் ஜனனி!

Date:

வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பிக்பொஸ் பாகம் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனியும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்கிறார் ஜனனி.

ஏற்கனவே பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் வழியில் இப்போது ஜனனியும் தமிழ் படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...