பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு, இலங்கை நன்கொடை

Date:

துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 1500 கிலோ தேயிலை வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக சுமார் 55,000 டொலர்கள் மதிப்புடைய போர்வைகள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்றன.

மேலும்  இலங்கையில் உள்ள WingsofHumanity மற்றும் Soup Kitchen இன் ஒத்துழைப்புடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட 1254 குளிர்கால போர்வைகள் மற்றும் 17 மின்உற்பத்தி இயந்திரங்கள்  நேற்று இரவு துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...