2023 – 2024: இந்திய புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல்!

Date:

இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் சார்பில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் வழங்கப்படும் வழங்கும் இந்த திட்டத்தில் நேரு நினைவு புலமைப்பரிசில், மௌலானா அசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட 03 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், மனித வளம் உள்ளிட்ட துறைகள் நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தில் அடங்குகின்றன.

மௌலானா அசாத் புலமைப்பிரிசில் திட்டத்தின் கீழ் குறித்த பாடங்கள் தொடர்பான முதுகலை பட்டப் படிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்பை தொடர முடியும் என  இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனித வள /சமூக விஞ்ஞானம் மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் கலாநிதி பட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...