அரசியலமைப்புச் சபையின் விசேட கூட்டம் 9 ஆம் திகதி!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன புதிய உறுப்பினர்களை நியமிக்கும் ஏனைய ஆணைக்குழுக்கள் ஆகும்.

அந்த ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முதற்கட்ட பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருகின்றன.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...