பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும்  காலிமுகத்திடல் ஆகிய இடங்களுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும்  உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கொழும்பில் வேறு பல நியமிக்கப்பட்ட வீதிகளை மறிப்பதில் இருந்து சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...