ரமழானில் உம்ரா சென்றவர்களின் பஸ், விபத்து: 20 பேர் மரணம்

Date:

உம்ரா யாத்திரிகர்களைச் சுமந்து சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் சவூதி அரேபியா அசீர் நகருக்கு வடக்கே ஷார் பாஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததுள்ளது.

உம்ரா செய்வதற்காக காமிஸ் முஷைத்தில் இருந்து மக்கா நோக்கி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மஹயில் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. வாகனத்தில் பிரேக் ஒழுங்காகச் செயற்படாமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 20 பேர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் இந்தியர்கள் 16 பேர் அடங்குகின்றனர். பேருந்தில் இந்தியர்கள் தவிர வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

காயமடைந்த 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...