எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு!

Date:

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும்.

முதலில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி ஊர்திகளுக்கு GPS அமைப்பு பொருத்தப்படும். அதன்பின்னர் அனைத்து தனியார் தாங்கிகளுக்கு அவை பொருத்தப்படும்.

அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்பு கொள்ளளவை பராமரிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...