பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடை துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 3,831,000 மீட்டர் சீருடை துணியில் 3,561,000 மீட்டர் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீட்டர் சீருடை துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை சீருடைக்கான தேவை 12,694,000மீட்டர் எனவும், 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...