‘இலங்கை மக்களின் அன்பால் நான் நிரம்பி வழிகிறேன்’ சிறந்த சமூக ஊடக செல்வாக்காளர் கலீத் அல் அமெரி இலங்கையில்

Date:

பிரபல சமூக ஊடக ஆர்வலர் கலீத் அல் அமெரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் ‘இலங்கையின் சமூகம் மற்றும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவால் நான் நிரம்பி வழிகிறேன், நாங்கள் வீட்டில் இருப்பதை உணர்ந்ததற்கு நன்றி, நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் YouTube  தளத்திலே  மிகவும் பிரபலமானவர். அவருக்கு 8 மில்லியன் பேஸ்புக்  பயனாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலித் அல் அமெரி செல்லும் நாடுகளில், அந்த நாட்டைப் பற்றி ஆன்லைனில் ஒரு அவர்  சிறப்பு விளக்கம் செய்வார். ஏழை எளியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் நிறைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.

காலிட் அல் அமெரியின் இலங்கை விஜயம் இலங்கை பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அவர் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அரபுலகில் மிகவும் புகழ்பெற்றவரான காலித் அல்-அம்ரியின் தற்போதைய இலங்கை வருகை இலங்கையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...