டெங்கு பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

Date:

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குமென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

67 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோய் பரவுதற்கான அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...