கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த 7500 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று(16) வழங்கப்படவுள்ளன.
அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகள், மேல் மாகாண பாடசாலைகளில் கற்பிக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களும் இங்கு வழங்கப்படவுள்ளன.
தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
ஆரம்பப் பிரிவு, சாதாரணதர பாடங்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் இன்று(16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.