அக்கரைப்பற்று மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!

Date:

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மாஹிம்புல, மதுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...