‘புராதன சின்னங்களை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்க வேண்டும’

Date:

நாட்டின் புராதன சின்னங்களை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறப்போகும் கருத்துக்கள், அந்த வழக்குகளுக்கு சாதகமாவோ பாதகமாகவோ கூட மாறலாம்.

எனவே, வழக்கு விசாரணைகள் இடம்பெறும் ஒரு விடயம் தொடர்பாக என்னால் நாடாளுமன்றில் கருத்து கூற முடியாது.

இந்நாட்டை பொறுத்தவரை புராதனச் சின்னங்கள், நாடளாவிய ரீதியாக பல இடங்களில் காணப்படுகின்றன.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்திற்கு இவை உரியதா என்பதல்ல பிரச்சினை.

இந்தப் புராதனச் சின்னங்களின் பெருமையை நாட்டுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் காண்பிக்க வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்கு இதனை நாம் இவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...