இலங்கையில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர்: ஆய்வில் தகவல்

Date:

இலங்கையில் நாள்தோறும் 9 பேர் அளவில் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனை பல்கலைக்கழக ஆய்வொன்றில் மூலம் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், மூன்று வருட காலத்தில் 9,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தற்கொலை செய்துள்ளவர்களில்,  83 வீதமானவர்கள் ஆண்கள், 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள்,  கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை,

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 விகிதமானவர்கள் கல்வி கற்பவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை தொடர்பவர்கள் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பாக செய்திகள் அண்மைய நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளன.

தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களாக தொழிலின்மை, பொருளாதார நெருக்கடி என்பன பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கல்வி கற்கும் மாணவர்களை பொருத்தமட்டில் அதிகளவான மன
அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டோரில் 83 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதில் 35வீதமானோர் வேலையற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...