சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
“இலங்கையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் 5 வருடங்களுக்கான புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடக 300 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்குவதற்குத் தயாராக உள்ளது” எனவும் மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச் சபாநாயகரிடம் தெரிவித்தார்.