அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

Date:

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வைத்தியர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இலங்கையில் முதலாவது அரச சார்பற்ற மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சில வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தெரிவுசெய்யும் அதேவேளை, நாட்டில் உள்ள மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த சவாலை எதிர்கொள்ள மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவது ஒரு முக்கியமான உத்தி என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...