டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் நாடு ஆட்டோ ஓட்டுனர்!

Date:

விழுப்புரத்தை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வியந்து போனேன்  ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்” என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிந்து மகிழ்ந்தார் வைரமுத்து. பின்பு அவரிடம் ‘இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நான் டாக்டர் பட்டம் வாங்க போரண்டா…’ என பாடி அந்த ஆட்டோ ஓட்டுநரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் உயர்கல்வி அல்லது கல்லூரியில் அவருக்கு இடம் வாங்கி கொடுக்க அருகில் இருந்தவரிடம் அறிவுறுத்தினார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...