பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு

Date:

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து  ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய்  வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை வீதியின் இருபுறமும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி,   சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொடர்புபட்ட உள்ளுராட்சி அதிகாரிகளுடன் இணைந்து வீதியோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான காலநிலை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் அகற்றுமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், சேதங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

வீதியின் இருபுறங்களிலும் முறிந்து விழும் ஆபத்துள்ள மரங்களை அகற்றுமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...