பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மத்தியில் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அடிக்காதே, அடிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு, எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள், எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி கொடுங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...