புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் பதிவாளரும் பிரபல ஜோதிடருமான இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக கொழும்பு – 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
29 செப்டம்பர் 2023 அன்று யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார்.
இதன்படி இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.